ரஜினி மம்முட்டி இணையும் புது படம்
26 வருடங்களுக்கு முன் 1991-ம் ஆண்டு ரஜினியும், மம்முட்டியும் இணைந்து நடித்த `தளபதி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தமிழக சூப்பர் ஸ்டாரும், கேரள சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்த `தளபதி' அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு அவர்கள் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை.
இப்போது ஒரு மராத்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை தீபக் பாவேஷ் இயக்குகிறார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்திற்கு `பஷாயதன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்த ரஜினிகாந்த் தற்போது, மராத்தியில் முதல் முறையாக நடிக்கிறார்.