முதல்வர் போராட்டம்: புதுவைக்கு துணை ராணுவம் வருகை

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தவுள்ள போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளது. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாக இருக்கிறார். கடந்த 4 வருடங்களில் எந்த வித வளர்ச்சி பணிகளும் பெறவில்லை. எனவே கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 8 ஆம் தேதி கவர்னர் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.

இந்த போராட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர். கவர்னர் கிரண்பேடி க்கு எதிராக ஆளும் கட்சியினரே போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமலிருக்க காவல்துறை அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மேலும் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு பணிக்கு 5 கம்பெனி அடங்கிய, துணை ராணுவ குழுவை புதுச்சேரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என புதுவை டிஜிபி பாலாஜி ஸ்ரீ வச்தவா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதை ஏற்று கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், நாளை மாலை 3 துணை ராணுவம் கம்பெனியை புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கிறது.

More News >>