சிம்பு சொன்னதை கேட்டு பாசத்திற்கு கட்டுப்பட்ட கர்நாடக மக்கள்!

நடிகர் சிம்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க கர்நாடக மக்கள் அங்கு வசிக்கும் தமிழக மக்களுக்கு குடிநீர் வழங்கி தங்களது அன்பை பறிமாறிக்கொண்டு உள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத் துறையினர் சார்பில் கடந்த 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கண்டன அறவழிப் போராட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், சிம்பு இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, “நடிகர் சங்கம் சார்பில் மவுனப் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. முதலில் தமிழ்நாட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடக்கிறது. நிறைய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. அதை நான் தவறு என்று கூறவில்லை.

அந்தப் போராட்டத்திற்கு என்னை அழைக்கவும் இல்லை. அதனால் நான் செல்லவில்லை. ஜல்லிக்கட்டு நேரத்திலேயே நான் சொன்னேன். அதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒருவன் என்ன பேசுகிறான் என்று கேட்கும் நிலையில் இல்லை. இங்கு பிரச்சினையே நான் பேசுவதுதான்.

காவிரி விவகாரத்தில் ஓட்டு வாங்க மட்டும்தான் இரு மாநில அரசியல்வாதிகளும் காவிரி விவகாரத்தை பயன்படுத்துகின்றனர். புதன்கிழமை 3-6 மணி வரை கார்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து, தமிழர்களுக்கு தண்ணீர் தருவோம் என வீடியோ எடுத்து காட்டுங்கள். கர்நாடகாவில் இருப்பவர்களும் மனிதர்கள் தான்.

நம் உறவுகள் தான். மக்கள் ஒற்றுமை முக்கியம். Unite for humanity என்ற ஹேஸ்டேக் உருவாக்கி, ஒற்றுமையை காட்டும் வகையில், மக்கள் இந்த விஷயத்தை பகிருங்கள்” என்று ஆவேசமாக கூறினார். இது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது.

இந்நிலையில், சிம்பு கூறியிருந்த வீடியோவை இணையத்தில் பார்த்த கர்நாடக மக்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போல் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் #Uniteforhumanity என்ற ஹேஸ்டேக் மூலம் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>