ரத்தன் டாட்டா செய்த ரகசிய காரியம்..
நம் நாட்டின் டாப் பிசினஸ் வி. ஐ. பி.யான ரத்தன் டாட்டா . 83 வயதான ரத்தன் டாடா, தன்னிடம் வேலை பார்த்த, உடல்நலமின்றிய முன்னாள் ஊழியர் ஒருவரை அவரது வீட்டுக்கே நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளார். இதற்காக மும்பையிலிருந்து பூனே பிரெண்ட்ஸ் சொசைட்டியில் உள்ள அந்த ஊழியரின் வீட்டுக்கு கார் மூலம் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அந்த ஊழியர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலம் குன்றியுள்ளார்.
அந்த ஊழியருக்கும் அவரது குடும்பத்திற்கும் முழு மருத்துவமனைகளையும் இனி தாம் ஏற்றுக்கொள்வதாகவும் குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் ரத்தன் டாட்டா உறுதியளித்திருக்கிறார். இந்த சந்திப்பை யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாகவே வைத்திருந்துள்ளார் ரத்தன் டாடா. தற்போது அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரத்தன் டாடாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை ரத்தன் டாடா இன்னும் தொடர்ந்து செய்து வருகிறார்.