இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா?

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கினால், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் சூழ்நிலை உருவாகும் என அந்நாட்டின் பார்லிமென்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் ஏவுகணைகளை துல்லியமாக தாக்கும் வல்லமையை படைத்தது இரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணைகள். எனவே இம்மாதிரியான 5 ஏவுகணைகளை இரஷ்யாவிடம் இருந்து பெற, ரூ.38,617 கோடியில் இந்தியா கடந்த 2018 ல் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்திய அரசாங்கம் ஒப்பந்தத்தின் படி முதல் தவணையாக ரூ.5843 கோடியை ரஷ்யாவிடம் வழங்கியுள்ளது. இதனால் இந்திய- அமெரிக்க நாடுகள் இடையே விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்துதல், அந்நிய முதலீடுகளை கவர்தல் போன்ற கொள்கைகளால் இந்தியா அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கினால், இந்தியா மீது அமெரிக்க அரசு பொருளாதார தடையை விதிக்கும் என அந்நாட்டின் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

More News >>