லவ் ஜிஹாத் சட்டம்: ஆதரவாக 224 அதிகாரிகளும் எதிராக 104 அதிகாரிகளுக்கு உ.பி. முதல்வருக்கு கடிதம்!

லவ் ஜிஹாத் சட்டத்துக்கு ஆதரவாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு 224 அரசு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். லவ் ஜிஹாத்-துக்கு எதிராக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் சட்டங்கள் இயற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த வரிதையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசும் லவ் ஜிஹாத் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச அரச மாநிலத்தில் இந்த லவ் ஜிஹாத் சட்டம் நவம்பர் 28-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து சட்ட அமல்படுத்திய 24 மணி நேரத்திற்குள் 2 வழக்குகள் பதிவாகின. மேலும், 9 நாட்களில் 56 வழக்குகள் பதிவாகியது.

இருப்பினும் மணப்பெண் உள்ளிட்ட வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள் கொடுக்கப்படும் புகாரின் கீழ் கைது நடவடிக்கை செய்யப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, லவ் ஜிஹாத் சட்டம் மிகவும் ஆபத்தானது. லவ் ஜிஹாத் என்ற பெயரில், மாநிலத்தை வெறுப்பு, பிளவு மற்றும் மதவெறி அரசியலின் மையமாக மாற்றிவிட்டது. சர்ச்சைக்குரிய லவ் ஜிஹாத் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடந்த வாரம் ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் 104 பேர் கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது லவ் ஜிஹாத் சட்டத்துக்கு ஆதரவாக 224 அரசு ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதில், பல்வேறு உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் என மொத்தம் 224 அரசு ஊழியர்கள் இணைந்து சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், கடிதத்தில் 224 பேரும் கையெழுத்திட்டத்துடன் இந்திய ஜனநாயகம் மீதான தங்கள் நம்பிக்கை இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

More News >>