சட்டப் பேரவைத் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும்? - கர்நாடக மாநில சி.பி.எம் செயலாளர் விளக்கம்
கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் கர்நாடக மாநிலச் செயலாளர் ஜி.வி. ஸ்ரீராமரெட்டி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 12-ஆம் தேதி அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
அந்தக் கட்சி தேர்தலுக்கு இரண்டு மாதம் முன்பே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. இந்நிலையில், அக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.வி. ஸ்ரீராம ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “கர்நாடகாவல், பாஜகவை வீழ்த்துவதே தங்களின் இலக்கு” என்று கூறினார். “கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மற்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளரை தோற்கடிக்கும் வலுவான வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்போம். பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்பதை உறுதி செய்வோம்” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com