தொடங்கியது மோடி உரை! ராணுவ கண்காட்சியில் பா.ஜ.க தொண்டர்களுக்கே அனுமதியில்லை!
இந்திய பாதுகாப்புத்துறை சார்பாக 'பாதுகாப்புக் கண்காட்சி 2018' இன்று சென்னையில் பிரதமர் மோடியால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தைப் பகுதியில் பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. வருகிற 14-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட 42 நாடுகள் கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது.
கிழக்குக் கடற்கரைச் சாலை அருகில் 400 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு, ரூ.463 கோடி செலவில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி துவக்கிவைக்க தொடங்கும் இந்த விழாவில் தமிழக பா.ஜ.க தொண்டர்கள் கட்சிக் கொடியுடன் நுழைந்த போதும் அனுமதி மறுக்கப்பட்டதால் தொண்டர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அதிசயமாக மோடி பங்கேற்ற ஒரு விழாவில் தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு மோடி தற்போது தனது உரையைத் துவக்கி உள்ளார். தமிழகத்தின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முதலாவது வரிசையில் அமர்ந்து மோடியின் உரையை ஆழ்ந்து கவனித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com