ஆடம்பர காரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த நடிகை..
திரையுலகில் கொடிகளில் சில ஹீரோ, ஹீரோயின்கள் சம்பளம் பெறுகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் அதற்கேற்ப பந்தாவாக நடத்துகின்றனர். கன்னடத்திலிருந்து தெலுங்கு படத்தில் நடிக்க வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ராஷ்மிகா. விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் ஹிட்டாக அமைந்தன. மகேஷ் பாபுவுடன் நடித்த சரிலெறு நிக்கெவரு படம் ஹிட்டானது. இதையடுத்து அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் ஜோடியாக நடிக்கிறார். அடுத்து திரி விக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போட்டியில் முந்திக்கொண்டிருக்கிறார்.
மேலும் அவர் நடித்துள்ள கன்னட படம் பொகறு படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடிக்கிறார். மற்றொரு தமிழ்ப் படத்தில் நடிக்கப் பேச்சு நடத்தி வருகிறார். கோவுலிட், டோலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தனது நடிப்பால் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். ஏற்கனவே வசதி யான குடும்பத்தைச் சேர்ந்த ராஷ்மிகா தனது தந்தையின் கம்பெனியில் பங்குதாரராகவும் இருக்கிறார். ஆடம்பர பங்களா, எஸ்டேட், ஆடம்பர கார் என இருந்தாலும் அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தில் தற்போது ஒரு ஆடம்பர கார் வாங்கி இருக்கிறார்.
ரேஞ்ச் ரோவர் என்ற கார் வாங்கி இருக்கும் அவர் அந்த காரை ரசிகர்களுக்குத் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இன்னும் பதிவு செய்யப்படாத அந்த கார் அருகில் நின்று புகைப்படத்துக்கு போஸ் அளித்திருக்கிறார்.இதுபற்றி அவர் கூறும்போது, என்னுடைய விஷயங்களை நான் எனக்குள் தான் வைத்துக் கொள்வேன். அதை வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் இந்த காரை பொருந்தவரை ரசிகர்களாகிய உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதற்குக் காரணம் இந்த பயணத்தை நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள். அதனால் தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இது உங்களுக்கு... நன்றியுடன் எனத் தெரிவித்திருக்கிறார்.ராஷ்மிகா கன்னடத்தில் நடித்த போது கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்தை ராஷ்மிகா ரத்து செய்துவிட்டார். அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். நிச்சயதார்த்தம் முறிந்ததால் ராஷ்மிகா, ரக்ஷித் ஷெட்டி மனஸ்தாபத்தில் இருந்தனர்.
சமீபத்தில் இவர்களுக்குள் இருந்த மனக்கசப்பு விலகி மீண்டும் நண்பர்கள் ஆனார்கள். ராஷ்மிகாவுக்கு முன்பே கோலிவுட்டில் பெரிய நடிகர்கள் விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் வைத்திருக்கின்றனர். ரஜினிகாந்த் பிஎம்டபிள்யு எக்ஸ்5 என்ற கார் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு 89.45 லட்சம். கமல்ஹாசன் ரேன்ஞ் ரோவர் 42.98 லட்சம்.அஜீத்குமார் பைக் ரேஸ் வீரர் என்பதால் காரை விட அதிகம் ரேஸ் பைக்குகளை விரும்புவார். 1000 சிசி பைக் 21.16 லட்சம் மதிப்பில் வைத்திருக்கிறார்.நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு 5 கோடி. நடிகர் சூர்யா ஆடி Q7 கார் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 82 லட்சம். விக்ரம் ஆடி R8 இதன் மதிப்பு 2.7 கோடி. தனுஷ் பென்ட்லி கான்டினென்டல் ஃபிளையிங் ஸ்பர் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ 4.53 கோடி. நடிகர் கார்த்தி எமெர்சிடஸ் பென்ஸ் எம் எல் 359 வைத்துள்ளார். இதன் மதிப்பு 67.9 லட்சம் ஆகும்.