கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நடிகர்..
பல நடிகர் , நடிகைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர். இவர்களில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சரத் குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா , ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர்.சில தினங்களுக்கு முன் வானம் பட இயக்குனர் கிரிஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமுடன் நடித்த பனிதா சந்த நேற்று அமெரிக்காவிலிருந்து மும்பை வந்தபோது விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று குணம் ஆனவர்களில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் நடிகை நிஹாரிகா திருமணத்தில் பங்கேற்க உதய்பூர் சென்று திரும்பிய நடிகர்கள் ராம் சரண், வருண் தேஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் ராம் சரணும் வேடம் ஏற்று நடிக்கிறார். இருவரும் இணைந்து அசத்தல் போட்டி நடனம் ஒன்றுக்கும், எஸ் எஸ்.ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்கவும் ராம் சரண் தயாராகி வந்த நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப் போலவே நடிகை வருண் தேஜ் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது இவர் குணம் அடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.இதுபற்றி வருண் தேஜ் வெளியிட்டுள்ள மெசேஜில், கொரோனா வைரஸ் பாசிடிவ் ஆனதால் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். 7 நாட்கள் தனிமை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு பரிசோதனை செய்ததில் கொரோனா நெகடிவ் ஆகி இருக்கிறது. கொரோனா நீங்கியது என்ற முடிவைக் கேட்டதும் இவ்வளவு மகிழ்ச்சி அடைவேன் என்று எண்ணிப்பார்க்கவில்லை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரசிகர்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் எனது நன்றி எனக் கூறியிருக்கிறார்.