15 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. புத்தகத்தை தூக்கும் வயதில் குழந்தையா?? கதறும் பெற்றோர்கள்..
15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டு 8 மாத கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு பகுதியை சார்ந்தவர் சதிஷ் மற்றும் ஏழுமலை. அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளனர். ஏப்ரல் மாதம் நடந்த ஒரு விழாவில் சிறுமி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது சதிஷ் மற்றும் ஏழுமலை இருவரும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.
பிறகு சிறுமியிடம் இங்கு நடந்தவற்றை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று பயம்முறுத்தியுள்ளனர். இந்நிலையில் திடீரென்று சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைக்குறித்து சிறுமியின் பெற்றோர்கள் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்து விட்டு மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேள்விப்பட்ட பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸ் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரித்தனர். விசாரித்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் என்பது உறுதியானது. சிறுமி கொடுத்த வாக்குமூலத்தை வைத்து ஏழுமலை மற்றும் சதிஷ் இருவரையும் போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கற்கும் வயதில் அவளுக்கு ஒரு குழந்தையா என்று பெற்றோர்கள் சிறுமியின் எதிர்காலத்தை நினைத்து புலம்பி வருகின்றனர்.