கயல் ஆனந்தி யாருக்கும் தெரியாமல் திடீர் ரகசிய திருமணம்..!.
முதன் முதலாக தமிழ் சினிமாவில் பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் ஆனந்தி. இந்த திரைப்படத்தில் சாக்லேட் பாயான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்த்து நடித்திருந்தார். இப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு கயல் என்ற படத்தில் நடித்தார். பொறியாளன் திரைப்படத்தை விட கயல் திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்று தந்தது. இதன் பிறகு இவர் கயல் ஆனந்தி என்றே வழங்கப்பட்டார். பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி வீரன், விசாரணை போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து கலக்கியவர். 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியானது.
இதில் இவர் கதாநாயகியாக நடித்திருந்த தோற்றம் மற்றும் அவரது நடிப்பு மிகவும் பரபரப்பாய் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கவுரவ கொலை பற்றிய தொகுப்பாய் இப்படம் இடம்பெற்று இருந்தது. இதனால் இப்படத்திற்கு அளவில்லாத விருதுகள் குவிந்தது. இந்நிலையில் இவருக்கு இன்று இரவு 8 மணிக்கு ரகசிய திருமணம் என்று ஊடகத்தில் பரவி வருகிறது. மாப்பிள்ளை தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்ற செய்தி மட்டும் கசிந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த திருமணம் முழுக்க முழுக்க பெரியவர்களால் நிகழ்வது காதல் திருமணம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.