#GoBackModi..!- சர்வதேச அளவில் வலுத்த எதிர்ப்பு...மோடிக்கு எதிராக அதிரும் ட்விட்டர்!

திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வந்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள மோடிக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கொடுத்த காலக்கெடுவுக்கு பின்னரும் வெவ்வேறு காரணங்களை சுட்டிகாட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் இருந்து நழுவி வருகிறது மத்தியில் ஆளும் பாஜக.

இதற்கு தமிழக அளவில் உள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ் மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமலேயே சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட கொந்தளிப்பான சூழலில் திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஏற்கெனவே, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டப்படும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த கருப்புக் கொடி போராட்டம் நடந்து வருகின்றன. இதற்கு சற்றும் குறைவில்லாமல் மோடிக்கு எதிரான ட்வீட்டுகளும் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பறந்து வருகின்றன.

குறிப்பாக `#GoBackModi’ என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பெரும்பான்மையானோர் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது உலக அளவில் சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்க்கும்படி ட்ரெண்டாகியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>