கவர்னரை எதிர்த்து முதல்வர் போராட்டம்: புதுவையில் புது டென்ஷன்

புதுவையில் நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தவிர்க்க காவல்துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக உள்ள கிரண்பேடியை மாற்ற கோரி புதுவை முதல்வர் நாராயணசாமி நாளை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளார். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அவர் நடத்தும் இந்த போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஒருவேளை மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது தவிர்க்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு அம்மாநில போலீஸ் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரி சீனியர் எஸ். பி. மகேஷ்குமார் பர்ன்வால் இதுகுறித்து உயர்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொடர் போராட்டத்தை நாளை தொடங்குகின்றனர்.

கடந்தகால சம்பவங்களை கருதில்கொண்டு ராஜ் நிவாஸ், சட்டப்பேரவை, தலைமைச்செயலகம் ஆகிய பகுதிகளை சுற்றி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தவிர்க்க அறிவுறுத்துமாறு அனைத்து கல்விநிறுவனங் களுக்கும் தெரிவிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More News >>