பஜாஜ் நிதி நிறுவனத்திற்கு ரூ.2.50 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ!
இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, தனது ஆளுமைக்கு உட்பட்ட அனைத்து வங்கி சார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அந்த நிறுவனங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா? இல்லையெனில் அவற்றின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு செயல்களை நடைமாறைபடுத்துகிறது. மேலும் ஆர்பிஐ வங்கியானது ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.
இந்த ஆர்பிஐ வங்கியானது, சமீபத்தில் 05 ஜனவரி 2021 அன்று பஜாஜ் நிறுவனத்தின் புனே கிளையில் உள்ள மீட்பு முகவர்கள், வாடிக்கையாளர்களிடம் நிதி வசூலிப்பு நடவடிக்கை செய்யும் போது எல்லை மீறுவதாகும், மேலும் பணம் கட்ட தவரும் வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து, ஆர்பிஐ அமைப்பானது பஜாஜ் நிதி நிறுவனத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆர்பிஐ வழங்கிய வழிகாட்டுதலை மீறியது.
வங்கி சாராத நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறை வழிகாட்டுதலை பின்பற்றாதது போன்ற குற்றங்களை மேற்கோள் காட்டி, ஆர்பிஐ சட்ட விதி 1934 வழிகாட்டுதலின் அடிப்படையில் பிரிவு (பி), உட்பிரிவு (1) ல் விதி 58ஜி, பிரிவு ( ஏஏ), உட்பிரிவு (5) ல் விதி 58 பி படி வங்கி சாராத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் தனது வாடிக்கையாளர்களிடம், தாகாத முறை மற்றும் துன்புறுத்திய முகவர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு துணை நின்றதால், ஆர்பிஐ மேற்கண்ட விதிகளின் அடிப்படையில் ரூ.2.50 கோடி அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2021/01/PR891AB436B9CDEF74F7983D6AA6D251687B2.PDF