நீங்கள் செய்த ஹேர் கலர் உங்களுக்கு பிடிக்கவில்லையா?? கவலை வேண்டாம்..

இன்றைய காலக்கட்டத்தில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு போகும் பெண்கள் என எல்லோரும் பார்லருக்கு சென்று தங்களுக்கு பிடித்த ஹேர் கலரை செய்து கொள்கின்றனர். கூந்தல் தான் பெண்களுக்கு இயற்கையான அழகு. அப்படிபட்ட கூந்தலில் செய்த கலர் பிடிக்கவில்லை என்றால் வீட்டிலேயே எப்படி கலரை நீக்குவது குறித்து 3 பகுதிகளாக பார்க்கலாம்.

கலர் நீக்குவது எப்படி??ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த கலவையை தலை முடியில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு மிதமான நீரில் தலையை நன்றாக அலசி விட வேண்டும். எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் கலரை நீக்க உதவுகிறது. பின்னர் தலையில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் தேய்த்து முடியை பராமரிக்கவும்.

இரண்டாவது ஒரு பாத்திரத்தில் எப்சம் சால்ட் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து தலைமுடியில் தடவவேண்டும். 20 நிமிடம் கழித்து நீரில் அலச வேண்டும்.முடியில் இருக்கும் செயற்கை கலரை நீக்கி கருமையான கூந்தலை தருகின்றது.

மூன்றாவது நீங்கள் பார்லரில் செய்த கலர் பிடிக்கவில்லை என்றால் 24 மணி நேரத்திற்க்குள் வினிகரை பயன்படுத்தி 10 நிமிடத்தில் செயற்கை கலரை எடுத்து விடலாம்.

More News >>