போராளிகளை வாழ்த்தி வணங்கும் நடிகர் சத்யராஜ் (வைரல் வீடியோ)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது மைதானத்தில் திரண்ட ஏராளமானோர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வரியம் அமைக்காமல் இங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்த விடமாட்டோம் என்றும், அதேவேளை நாங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு எரிரானவர்கள் இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் அனைத்தும் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் காவிரிக்காகப் போராடும் தமிழக மக்களைப் போற்றுவதாகவும், அவர்களை வணங்குவதாகவும் கூறி வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோ,

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>