நடிகருடன் செல்ஃபி எடுத்த ஹீரோயின்..
நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். அடங்க மறு, ஆயோக்யா, சங்கத் தமிழன் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்கள் ஒப்புக்கொண்டார். மீண்டும் தமிழில் அவருக்கு ஒரு வாய்ப்பு இன்னொரு நடிகையின் கால்ஷீட் பிரச்சனையால் கைகூடியது.விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் முதலில் அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது. சுமார் 6 மாத கால இடை வெளிக்குப் பிறகு மீண்டும் கொரோனா கால ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு அதிதியை அழைத்தபோது அவர் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருந்த இந்தி படத்தால் சிக்கல் ஏற்பட்டது. தனது நிலைமை துக்கள் தர்பார் இயக்குனரிடம் கூறினார். இதையடுத்து துக்ளக் தர்பார் படக் குழு அவருக்குப் பதிலாக ராஷி கண்ணாவை ஒப்பந்தம் செய்தது. இதையறிந்து மகிழ்ச்சி அடைந்த அதிதி ராவ் ராஷிகண்ணாவுக்கும் படக் குழுவுக்கும் வாழ்த்து பகிர்ந்தார்.
சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே ராஷி கண்ணா ஜோடியாக இணைந்து நடித்திருந்தார். தற்போது மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் சேதுபதியிடம் பேசிக் கொண்டிருந்த ராஷி கண்ணா அவருடன் செல்பி புகைப் படம் எடுத்து பகிர்ந்தார்.அவர் வெளியிட்ட கேப்ஷனில்,திறமை வாய்ந்த விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் மற்றொரு அழகான பயணம். இந்த வாய்ப்பளித்த இயக்குனர் டெல்லி தீன தயாலனுக்கு நன்றி. படக் குழுவுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றார்.
ராஷிகண்ணா தமிழில் மேலும் அரண்மனை 3 மேதாவி, சைதான் க பச்சா ஆகிய படங்களில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கு முன்பே இந்தியில் 2013ம் ஆண்டி மெட்ராஸ் கேஃப் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி இருக்கிறார் ராஷி கண்ணா. நீண்ட இடை வெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. தி பேமலி மேன் என்ற வெப் சீரிஸ் தயாரித்திருக்கும் நிறுவனத்தின் புதிய இந்தி படத்தில் நடிக்க உள்ளார் ராஷி. இவருடன் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.