முழங்கையில் உள்ள கருமையைப் போக்கnbspஎன்ன செய்யலாம் ?
By Isaivaani
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும். இந்த பகுதியில் உங்கள் முழங்கையில் இருக்கும் கருமையைப் போக்கும் வழிமுறைகளைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம்.
உருளைக்கிழங்கு சருமத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் நீங்கா கருமைகளைப் போக்கும். எனவே, உருளைக்கிழங்கை அரைத்து அதில் சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.
1 டேபிள் ஸ்பூன் கடலை மாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால், விரைவில் கருமை நிறம் நீங்கி தோல் பளபளப்பாக மாறும்.
கடலை மாவு மற்றும் தயிரை சரிசம அளவில் கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் கண்கூடாகக் காணலாம்.
கற்றாழை ஜெல்லை தினமும் முழங்கையில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முழங்கையில் உள்ள கருமை நிறம் விரைவில் நீங்கும்.
எலுமிச்சை, தக்காளி, திராட்சை போன்றவற்றின் சாற்றினை முழங்கையில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முழங்கையில் உள்ள கருமை நீங்கும்.
பூண்டு மற்றும் வெங்காயத்தை சரிசம அளவில் எடுத்து அரைத்து, முழங்கையில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து பின், நீரில் கழுவ வேண்டும். இப்படி மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், முழங்கையில் உள்ள கருமை நிறம் போய்விடும்.