மாஸ்டர் சாதனையை முறியடித்த கே ஜி எஃப்2 டீஸர்..
நடிகர் யஷ் நடித்த கே ஜி எஃப் முதல் பாகம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் இன்னும் பிரமாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரவீனா டாண்டன் நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்தது. யஷ், சஞ்சய் தத் மோதிய பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவே டீஸர் வெளியானது. நடிகர் யஷுக்கு நேற்று பிறந்த தினம் பிறந்த தின வாழ்த்துடன் டீஸர் வெளிவந்துள்ளது.டீஸர் யூடியூபில் வெளியானது முதல் சாதனைகளைப் படைத்து வருகிறது. அதன்படி 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற இந்தியப் பட டீசர் என்ற சாதனையை கேஜிஎப் 2 படைத்துள்ளது. இதற்கு முன் 1.85 மில்லியன் லைக்குகளை பெற்று மாஸ்டர் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், அதனை முறியடித்து தற்போது கேஜிஎப் 2 டீசர் 10 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளை பெற்றது. இன்னும் இந்த லைக்குகள் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே கே ஜி எஃப்2 டீஸர் 30 மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ள நிலையில், யஷ் தனது பிறந்தநாளைக் நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து பகிர்ந்தனர்.யஷ் மனைவியும் நடிகையுமான ராதிகா பண்டிட் தனது கணவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.அதில், "சில நேரங்களில் நான் ஆச்சரியப்படுவேன், நீ ஏன் எனக்கு மிகவும் பெர்பெக்கட்டாக இருக்கிறாய் என்று. உன்னுடைய கேக்கை நீ என்னுடன் பகிர்ந்து கொள்வதால்தான் அது நடக்கிறது என்பதை உணர்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.