மாஸ்டர் படம் இணைய தளம், கேபிளில் வெளியிட தடை..

நடிகர் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பட வெளியீடு தள்ளிப்போனது. கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 8 மாதமாக மூடிக் கிடந்த சினிமா தியேட்டர்கள் கடந்த நவம்பர் மாதம் தான் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் பெரிய படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பல கோடி செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வசூல் குறையும் என்பதால் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கும் போது ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். இதனால் மாஸ்டர் படம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தியேட்டர் அதிபர்கள் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். நடிகர் விஜய்யும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து 100 சதவீத டிக்கெட் அனுமதிக்குக் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் 100 சதவீத டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது. இதையடுத்து வரும் 13ம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டிக்கெட் முன் பதிவுகளும் நடைபெற்று வருகின்றன.இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படம் திருட்டுத் தனமாக இணைய தளங்கள் மற்றும் கேபிள் டிவிக்களில் வெளியிடக் கூடாது. 9 மாதம் கடந்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே திருட்டுத்தனமாக மாஸ்டர் படம் வெளியிடத் தடை விதித்து உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கோரப்பட்டிருந்தது. அதை ஏற்று உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் சட்ட விரோதமாக மாஸ்டர் படம் வெளியிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். உருவாகி இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர்.

More News >>