தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது: அண்ணா பல்கலை., துணை வேந்தராக பதவியேற்ற சூரப்பா பேட்டி
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பதவியேற்ற சூரப்பா, “தனது நியமனத்தில் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பதவி ஏற்பதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா பதவி ஏற்றார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “ தனது நியமனத்தில்தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. சிறப்பாக பணியாற்றுவதன் மூலம் விமர்சனங்களுக்கு பதில் திருவேன்” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com