ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: கர்நாடகா அரசு ஒப்புதல்.!!!

கர்நாடகாவில் ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியில் உள்ள பூசாரிகளை திருமணம் செய்யும் 25 பிராமண பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதி பத்திரங்களை வழங்குதல் என்ற திட்டம். மற்றொன்று பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களைச் சேர்ந்த 550 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.25,000 உதவி வழங்குதல் திட்டம் ஆகிய இரு திட்டங்களை கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம் உருவாக்கியது.

கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தின் இரண்டு திருமண திட்டங்களை தொடங்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பிராமண மேம்பாட்டு வாரியத் தலைவர் எச் எஸ் சச்சிதானந்த மூர்த்தி கூறுகையில், அருந்ததி மற்றும் மைத்ரேய் ஆகிய என்று பெயரிடப்பட்ட இந்த இரு திட்டங்களைத் தொடங்க கர்நாடகா அரசு ஒப்புதல் அளித்து இதற்கான நிதியும் ஒதுக்கியுள்ளது. நிதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு உதவுவதற்கான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது என்றார்.

கடந்த 2018-19 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் எச்.டி குமாரசாமி இந்த திட்டத்தை அறிவித்தபோது அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.25 கோடி பட்ஜெட் நிதியைப் பயன்படுத்த பிராமண மேம்பாட்டு வாரியம் கொண்டு வந்த சமூக திட்டங்களில் திருமணங்களுக்கான நிதி உதவி உள்ளது. எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது 2019-ம் ஆண்டின் இறுதியில் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள ஆறு கோடி மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>