என்னது காஞ்சிபுரத்தை சோழர்கள் ஆண்டார்களா ? மோடியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
ராணுவ கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, “காஞ்சிபுரத்தை சோழர்கள் ஆண்டார்கள்“ என கூறிய பேச்சை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசை தமிழகம் முழுவதும் எதிர்த்து வருகின்றனர். அரசியல் கட்சிகள், அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திருவிடந்தையில் உள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதன் பிறகு மோடி பேசியபோது, “சோழர்கள் ஆண்ட காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.
பல்லவர்கள் ஆண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை சோழர்கள் ஆண்டனர் என்று பிரதமர் மோடி தவறாக கூறியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com