கொரோனா காலத்துல எதுக்கு இந்த லிப் கிஸ்.. நடிகையிடம் ரசிகர்கள் கேள்வி?
ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி, தனுஷுடன் குட்டி,சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஜெயம் ரவியுடன் மழை என முன்னணி நடிகர்களுடன் நடித்த வந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தது. இதற்கிடையில் தெலுங்கு இந்தி படங்களில் நடித்தார். பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைந்தது. இந்நிலையில் தமிழில் நரகாசுரன் படத்தில் நடித்தார் இப்படம் வெளியானால் தனது மார்க்கெட் மீண்டும் எகிறும் என்று எண்ணிய நிலையில் அப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது.
படம் முடிந்து 2 வருடம் ஆகியும் ரிலீஸ் ஆகவில்லை.ஸ்ரேயாவுக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்தது. ரஷ்யாவைச் சேர்ந்த அண்ட்ரெல் கொச்சீவ்வை கடந்த 2018ம் ஆண்டு மணந் தார். அதன் பிறகும் படங்களில் நடிக்க எண்ணிய நிலையில் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அதற்குப் பலன் கிடைத்தது. கடந்த ஆண்டு இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் கம்ணம். ராஜ மவுலியின் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களில் நடிக்கிறார்.
திருமணத்துக்குப் பிறகு ஸ்பெயின் நாட்டில் சென்று கணவருடன் வசித்து வருகிறார் ஸ்ரேயா. படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தால் வந்து நடித்துவிட்டு மீண்டும் சென்று விடுகிறார். ஸ்ரேயாவின் பெற்றோர் மும்பையில் வசிக்கின்றனர். ஸ்ரேயா சோஷியல் மீடியாவில் மிகுந்த ஆக்டிவாக இருக்கிறார். தினமும் தனது படங்களைப் பகிர்கிறார். தற்போது ஒரு படத்தைப் பகிர்ந்து ரசிகர்களைக் கிளுகிளுப்பாக்கி இருக்கிறார். கணவருடன் சுற்றுலாத் தலத்துக்குச் சென்ற ஸ்ரேயா அங்குள்ள ஒரு இடத்தில் அமர்ந்து கணவருக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து அந்த படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அந்த படம் வைரலானாலும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. எந்தவொரு விசேசமும் இல்லாமால் கொரோனா காலத்தில் இப்படியொரு லிப் கிஸ் தேவை தானா என்று சிலர் கேட்டிருக்கின்றனர்.
ஸ்ரேயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வித்தியாசமான படங்கள் வீடியோக்கள் பகிர்ந்திருக்கிறார். சீக்கிரமே பயணத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறியிருக்கும் அவர், பின்பக்கமாகத் திரும்பு பார்க்கும் படத்தை வெளியிட்டு, 2020ம் ஆண்டை திரும்பிப் பார்க்கிறேன்,. அனைவருக்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது. எதிர்த்துப் போராடிய அனைவருக்கும் எனது அரவணைப்புக்கள். நல்ல விஷயங்கள் நமக்குக் காத்திருக்கிறது என்றார்.