மோடிக்கு எதிராக போராட்டம்: சீமான், பாரதிராஜா, அமீர் விடுவிப்பு
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டியதை அடுத்து கைதான சீமான், பாராதிராஜா, அமீர் உள்ளிட்டோரை விடுவிக்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சி திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக நேற்று காலை சென்னை வந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு தமிழகத்திற்கு வாருங்கள் என்று திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், நாம் தமிழர், த.வா.க., ம.ம.க, தி.க உள்ளிட்ட பல கட்சியினர் கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களை தவிர, இயக்குனர்களான பாரதி ராஜா, அமீர், வெற்றி மாறன், சீமான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரையும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டு பின்னர் மாலை 6 மணிக்கு விடுவித்தனர். இதில், சீமான் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இதனால், சீமானை விடுவிக்கும் வரை நாங்கள் இங்கிருந்து வெளியேற மாட்டோம் என அனைவரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பின்னர் சீமான் உள்பட அனைவரையும் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com