ஆர்வக்கோளாறில் ஐடி கார்டுடன் போராட்டம்... `பாடி சோடா காமெடியான அமெரிக்க இளைஞர் செயல்!

அமெரிக்காவில் டிரம்பிற்கு ஆதரவாக ஐடி கார்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் வெற்றி பெற்றதாக, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சிறப்பு கூட்டம் நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள், பிடெனின் வெற்றியை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அடித்து நொறுக்கினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், 3 பேர் மோதலில் இறந்தனர். இதற்கிடையே, டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிடோல் ஹில்லில் பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்துகொண்ட ஒரு இளைஞர் பணியாற்றும் நிறுவனத்தில் ஐடி கார்டு அணிந்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், இளைஞரை நிறுவனம் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

இது தொடர்பாக நிறுவனம் அளித்த விளக்கத்தில், கடந்த ஜனவரி 6-ம் தேதி கேபிடோலில் நடைபெற்ற போராட்டத்தில் எங்கள் நிறுவனத்தின் ஐடி கார்டை அணிந்துகொண்டு ஒருவர் ஈடுபட்டார். எனவே எங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை கருத்தில்கொண்டு அவரை வேலையிலிருந்து அதிரடி நீக்க செய்திருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒவ்வொரு ஊழியரின் பாதுகாப்பும், அமைதியும் மிகவும் முக்கியமானது. ஒருவரின் தவறான செயல் மற்றவர்களை பாதிக்கக்கூடாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்தவே இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

More News >>