அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் - நீதிபதி அறிவுரை
அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடக் கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரை பொதுமக்கள் வந்து செல்லும் இடம். அங்கு 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க முடியாது என்றும், எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து மனுதாரர் கருத்தை அறிந்து தெரிவிக்க அய்யாக்கண்ணு தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டார்.
மேலும், தில்லியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதைப் போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அய்யாக்கண்ணு தரப்பு வழக்குரைஞரிடம் நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com