பேண்டேஜ் தொழில் டேமேஜ்..
நூல் விலை கடுமையாக உயர்ந்ததால் பேண்டேஜ் எனப்படும் துணி ரக தயாரிப்பு தொழில் சிக்கலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.மருத்துவத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பேண்டேஜ் துணி. தூய பஞ்சினால் மெல்லிய வலை போல உருவாகும் இந்த துணிகள் காயங்களைப் பாதுகாக்கும் வகையில் கட்டுப் போடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய பேண்டேஜ் குடிகள் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேண்டேஜ் மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி கூடங்கள் உள்ளன.
கொரோணா ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் பேண்டேஜ் தயாரிக்கப்படும் நூலின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த கோரி அரசிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இந்த தொழில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வரும் நாளை முதல் 17ஆம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்ய சத்திரப்பட்டி மருத்துவர் துணி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.