மாஸ்டர் கதை என்னுடையது : ரீலிசுக்கு முன்னே புகார்

விஜய் நடித்துப் பொங்கலுக்கு வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படம் பல்வேறு கட்ட இடங்களைத் தாண்டி. தயாராக உள்ளது.வழக்கமாக ஒரு படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது தான் இந்த கதை என்னுடையது என்று யாராவது நூல் விடுவார்கள். மாஸ்டர் படத்திற்கு அந்த கொடுப்பினை இல்லை படம் வெளியாவதற்கு முன்பே இது என்னுடைய கதை என்று ஒருவர் புறப்பட்டிருக்கிறார்.இந்த நிலையில் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ரங்கதாஸ் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில், நினைக்குமிடத்தில் நான் என்று கல்லூரி ஆசிரியர் குறித்துத் தான் எழுதிய கதையைத்தான் மாஸ்டர் படமாக எடுத்திருக்கிறார்கள். என் கதை திருடப்பட்டு இருக்கிறது இது குறித்து நடவடிக்கை எடுக்க உதவுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆயினும் இந்த புகார் குறித்து இந்த புகாரைச் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டதால், தற்போது ஊடகங்கள் மூலமாகக் கோரிக்கை வைத்திருக்கிறார் கே.ரங்கதாஸ். இதுதொடர்பாக வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

More News >>