ஜப்பானில் 100 நாட்களை கடந்து பாகுபலி 2 சாதனை!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பாகுபலி.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘பாகுபலி 2’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் வெளியானது. 1500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.
தற்போது வெளிநாடுகளிலும் வசூல் சாதனையை நோக்கி பயணித்து வரும் ‘பாகுபலி 2’ படம் ஜப்பான் நாட்டில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்திய திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படமும், ஆமிர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படமும் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம். இந்நிலையில், மூன்றாவதாக அதிக நாட்கள் திரைப்படம் என்ற பெயரை பாகுபலி பெற்றுள்ளது.
15-வது வாரத்தின் முடிவில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் 8.5 கோடி) ‘பாகுபலி 2’ படம் வசூலித்து சாதனை படைத்துள்ளது. வசூலில் குறைவான தொகையாக இருந்தாலும், சினிமாவில் அதிக ஆர்வம் இல்லாத ஜப்பானிய மக்கள் ‘பாகுபலி 2’ படத்தை 8 கோடி ரூபாய் தொகை கொடுத்து ரசித்து இருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமான விசயம் தான்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com