நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை.. வரிசைகட்டி நிற்கும் ஏவுகணைகள்.. அடுத்த பாய்ச்சலில் ஈரான்!

ஈரான் யூரேனியத்தை செறிவூட்டி, அளவுக்கு அதிகமான அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டுடனான அணுசக்தி உடன்பாட்டை ரத்து செய்து பொருளாதார தடை விதித்தார். இதனால், ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் டிரம்ப் காலத்தில் உச்சம் பெற்றது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார்.

புதிய அதிபராக தேர்வான ஜோ பைடன் இம்மாதம் பதவியேற்கவுள்ளார். ஜோ பைடன் மூலம் தடை செய்யப்பட்ட ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திட முயற்சி செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப முழு இணக்கத்துடன் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அந்த நாட்டு உடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். ஆனால், ஈரான் பேச்சுவார்த்தை குறித்து கண்டுகொள்ளவில்லை.

மேலும், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி முன்னெப்போதுமில்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட தொடங்கியது. தற்போது 20 சதவீத அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டி வருகிறது. கோம் பகுதியில் நிலத்துக்கடியில் இருக்கும் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தில் இந்த செறிவூட்டல் பணி நடந்துகொண்டிருப்பதாக தகவல் தெரியவந்தது.

இதற்கிடையே, தற்போது, நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து ஏராளமான அதிநவீன ஏவுகணைகளை வைத்திருக்கும் படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. மிக பிரமாண்டமாக காட்சியளிக்கும் அந்தச் சுரங்கத்தில் ஏராளமான ஏவுகணைகள், பல நூறு கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் போர் கப்பலைத் தகர்க்கக் கூடிய ஏவுகணைகள் இருக்கின்றன. ஹர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் அமெரிக்கா உள்ளிட்ட ஜிநாடுகளின் போர்க் கப்பலையும் தாக்கும் வல்லமை இந்த ஏவுகணைகளுக்கு இருக்கிறது என்று ஈரான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News >>