கால் டாக்ஸி டிரைவராகும் நடிகை..

அவார்டு படங்களில் நடித்தால் கமர்ஷியல் ஹீரோயினாக முடியாது என்ற கருத்தை உடைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த காக்க முட்டை, அட்டைகத்தி படங்கள் நன்கு பேசப்பட்டதுடன் அவரது நடிப்பும் பேசப்பட்டது. ஒருவழியாக இவரை அவார்டு நடிகையாக்கி விடுவார்கள் என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்தபோது அவரே தனது உடல் எடையை குறைத்து சிக்கென உருமாறி கமர்ஷியல் படங்கள், அதுவும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்தார். இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் நடித்துக்கொண்டிருந்தவர் தற்போது தெலுங்கிலும் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து பகிர்கின்றனர். அவர் கால் டாக்ஸி டிரைவர் ஆகிறார் என்ற டைட்டிலை படித்ததும் சிலர் ஷாக் ஆகி இருப்பர்கள். அவர் நடிக்கும் புதிய படமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கால் டாக்ஸி டிரைவராக அவர் வேடமேற்கிறார். வித்தியாசமான கதை களத்தில் 'டிரைவர் ஜமுனா' - மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகிறது. இதில் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் ஐஸ்வர்யா. இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும் மிகப் பெரிய வெற்றி அடையும். தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்டு, திரையில் உயிரூட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது பிறந்த நாள் பரிசாக புதிய பட அறிவிப்பு வெளியானதில் மகிழ்சியாக இருக்கிறார். வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தின் கதையை கேட்ட உடனே, இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்புக் கொண்டுள்ளார். 'டிரைவர் ஜமுனா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைகளம் என்பதால் நடிகர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில், கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என படக்குழு தெரிவித்து உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>