என் வேடத்தை யாராலும் கணிக்க முடியாது ரவீணா போடும் புதிர்..
நடிகர் ரவீணா டாண்டனை ஞாபகம் இருக்கிறதா? 1994ம் ஆண்டு திரைக்கு வந்த சாது படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர். பி.வாசு இப்படத்தை இயக்கி இருந்தார். அத்துடன் அவர் இந்தி படங்களில் நடிக்கச் சென்றவர் அங்கு பல படங்களில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தென்னிந்திய படத்தில் நடிக்கிறார் ரவீணா. யஷ் நடிக்கும் கே ஜி எஃப் 2 படத்தில் முக்கியமான வேடமொன்றில் கம்பீரமான பெண்ணாக வேடமேற்றிருக்கிறார். கேஜி எப் 2 படம் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இதில் சஞ்சய் தத் ஆதிரா என்ற பயங்கர வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு முன் இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய் முற்றிய நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கே ஜி எஃப் 2 படத்தில் நடிக்காமல் விலகுவார் என்று எண்ணினார்கள். ஆனால் அவர் மருத்துவமனையிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய உடனே முதல் படப்பிடிப்பாக கே ஜி எஃப்2 படத்தில்தான் நடித்தார்.
யஷ் உடன் சஞ்சய் தத் மோதிய சண்டை காட்சிகள் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்தது. உடல் சுகவீனமாக இருந்து தேறி வந்த சஞ்சய் தத்துக்கு பதிலாக டூப் நடிகரை இயக்குனர் பயன்படுத்த எண்ணியபோது தானே நடிப்பதாக கூறி சண்டை காட்சியில் கீழே விழுந்து எழுந்து ஆக்ரோஷமாக நடித்தார். அவரது உறுதியை படக்குழுவினர் பாராட்டினர். கடந்த 8ம் தேதி யஷ் பிறந்த நாள் அன்றை தினம் கே ஜி எஃப்2 படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. ஏற்கனவே எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த இந்த படத்தின் டீஸர் வெளியானவுடன் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. 24 மணி நேரத்தில் 78 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது. அடுத்த சில மணி நேரத்தில் 90 மில்லியன் ஆக உயர்ந்து பின்னர் 100 மில்லியன் வியூஸ் தொட்டது. டீஸரில் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி ஒரு பெண் கதாப்பாத்திரம் கம்பீரமாக நடப்பது போல் காட்சி இடம் பெற்றிருந்தது. அது யார் என்று பலர் யூகிக்கத் தொடங்கினார்.
அவர் ரவீணா டாண்டன். இப்படத்தில் நடித்தது பற்றி அவர் கூறும்போது, கே ஜி எஃப் முதல் பாகம் வந்தபோது நான் அதை பார்க்கவில்லை. ஆனால் 2ம் பாகத்தில் என்னை நடிக்க கேட்டு இயக்குனர் அணுகியபோது கதாபாத்திரத்தை கேட்டு பிரமித்துப் போனேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். பின்னர் கே ஜி எப் முதல் பாகம் படத்தை மிரண்டு போனேன். கே ஜி எஃப்2 படத்தில் நான் என்ன கதாப்பத்திரம் ஏற்றிருக்கிறேன் என்பதை யாரும் எளிதில் யூகிக்க முடியாது. ராமிகா சென் என்பது தான் எனது கதாபாத்திரத்தின் பெயர். இதுபற்றி வேறு எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது. இப்படத்தில் நடித்துள்ல யஷ் மிகவும் திறமையானவர் என்றார். கே ஜி எஃப்2 படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹோம்ப்லே பிலிம்ஸ் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் பான் இந்தியா படமாக விரைவில் வெளியாக உள்ளது.