கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா: எடப்பாடி அதிரடி
அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குரானா தொற்று பரவ காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வசதியாக தினமும் 2 ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு தினசரி இலவச டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அரசு கல்லூரிகள் மட்டுமின்றி கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.