தாமிரபரணி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க தடை
வெள்ள அபாயம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் ஆற்றங்கரையில் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையில் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் பாதுகாப்பு கருதி பொது மக்கள் ஆற்றுக்கு குளிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும் ஆற்றுங்கரைக்கு சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க செல்லாமலிருக்கவும் அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் த வே. விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.