அருண் விஜய், ராசி கண்ணா 1000 பேருக்கு கொரோனா டெஸ்ட்..
2020ம் ஆண்டை மக்களுக்குச் சோதனையாக ஆண்டாக கொரோனா தொற்று எப்படி ஆக்கியதோ அதேபோல் தமிழ் சினிமாவுக்கும் சோதனை ஆண்டாக மாற்றியது. ஊரடங்கு பிறப்பித்ததில் திரையுலகம் ஸ்தம்பித்தது ஸ்டியோக்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் முடங்கின. நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் காலத்தை கழித்தனர். 8 மாத காலம் எல்லாமே நஷ்டத்தை மட்டுமே சந்தித்தன. கொரோனா தளர்வில் திரையுலகுக்கு பணியாற்ற அளிக்கப்பட்ட அனுமதியால் வெகுவாக சகஜ நிலைக்குத் திரும்ப முயன்று வருகிறது.
படப் பிடிப்புகள் அரசு கூறிய முறைப்படி பாதுகாப்பாக நடந்து வருகிறது. வெளிப்புற படப்பிடிப்புகளும் முழுவீச்சிலும் நடக்கிறது.20க்கும் மேற்பட்ட படப் பிடிப்புகள் நடந்து வருகின்றன. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. வலிமை படத்தின் 3வது கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடக்கிறது.
இதற்கிடையில் அருண் விஜய் தனது படத்தை முடித்திருக்கிறார். குற்றம் 23' படத்திற்குப் பிறகு அருண் விஜய் - இயக்குனர் அறிவழகன் இணைந்திருக்கும் ஏவி 31. அதிக பொருட் செலவில் தயாராகும் ஸ்பை ஆக்ஷன் படம் த்ரில்லர். இப்படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா, புதுமுகம் ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் பகவதி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் பிரமாண்டமாக நடந்துள்ளது சுமார் 3000த்துக்கும் மேலான துணை நடிகர் கள் கொண்டு ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளைப் படமாக்கியுள்ளது படக்குழு. நாயகன் நாயகி உட்பட அனைவருக்குமே 3000 பேருக்குமே கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான இப்படத்தில் தயாரிப்பாளருக்காக கொரோனாவை பொருட்படுத்தாமல் படப் பிடிப்பை முடித்துத் தந்துள்ள அருண் விஜய் கூறுகையில்," எப்போதுமே சினிமா ஒரு கூட்டு முயற்சிதான். இந்த இக்கட்டான சூழலில் இப்படத்தை முடிப்பதில் எனக்கு உறுதுணையாக இருந்த இயக்குநர், நாயகி ரெஜினா மற்ற படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. அறிவழகனின் படங்களில் அடுத்தக்கட்ட படமாக இப்படம் இருக்கும். இந்த தைத் திருநாள் நம் தமிழ் சினிமாவுக்கு புது பாய்ச்சலைத் தரும் என நம்புகிறேன்" என்றார்.