பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று அறிகுறி..
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் எனத் திரையுலகில் கொரோனா தொற்று நடிகர் நடிகைகள் பலருக்கு ஏற்பட்டது. சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்ச்ன, சரத்குமார், ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். பிறகு அனைவரும் தற்போது படப் பிடிப்புகளில் கலந்து கொண்டு நடிக்கின்றனர்.
ஐஸ்வர்யாராய் கொரோனா தொற்று குணமாகி மாதக் கணக்கில் படப்பிடிப்பில் பங்கேற்கத் தயங்கினார். இதனால் கொரோனா லாக் டவுன் தளர்வில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் கால தாமதம் ஆகி வந்தது. ஒரு வழியாக 2020 ம் ஆண்டு முடியும் வரை ஐஸ்வர்யாராய் கால்ஷீட் தரவில்லை. இந்த ஜனவரியில் தான் அவர் கால்ஷீட் ஒதுக்கித் தந்தார். அதன்படி ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் பங்கேற்று நடித்து வருகிறார். இவரும் சரத்குமாரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன.
சரத்குமாரும் கொரோனா தொற்றால் கடந்த மாதம் பாதிக்கப பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார். படப் பிடிப்பில் தற்போது கடுமையான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. படப்பிடிப்பு தளத்திற்குள் வருவதற்கு முன் வெப்ப அளவு ஒவ்வொருவருக்கும் சோதனை செய்து காய்ச்சல் இல்லாத சீரான நிலையில் இருக்கிறார்களா எனப் பரிசோதிக்கப்படுகிறது.இந்நிலையில் டோலிவுட் பிரபல நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளது. தெலுங்கில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தவர் அனுசுயா பரத் வாஜ். இவர் பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சமந்தா தெலுங்கில் நடித்து ஹிட்டான ரங்கஸ்தலம் படத்திலும் முக்கிய வேடத்தில் அனுசுயா நடித்திருந்தார்.
தமிழில் உருவாகும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் சில்க் ஸ்மிதாவாக அனுசுயா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது ஆனால் அதை அவர் மறுத்தார்.அனுசுயா தனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று பற்றிக் கூறும்போது,சமீபத்தில் நான் கர்னூல் ஊருக்குச் சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்தேன் ஆனால் கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டேன். விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள விருக்கிறேன். சமீபத்தில் என்னைச் சந்தித்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்றார்.