அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த நடிகை ஷூட்டிங் ஓவர்..
பாலிவுட் நடிகைகளில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அமைரா தஸ்தூர் போன்ற சில நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கின்றனர். தீபிகா படுகோன் கோச்சடையான் அனிமேஷன் கேப்சர் படத்தில் ரஜினியுடன் நடித்தவர். பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாகத் தமிழன் படத்தில் நடித்தவர். அமைரா தஸ்தூர் தமிழில் தனுஷ் ஜோடியாக அநேகன் படத்தில் நடித்தவர். தீபிகாவும் அமைராவும் ஒன்றிரண்டு படங்கள் ஹாலிவுட்டில் நடித்துவிட்டு மீண்டும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர்.
பிரியாங்கா அமெரிக்காவில் கணவர் நிக் ஜோனஸுடன் தங்கி வாழ்ந்து வருகிறார். இந்தி படங்களைக் கூட தவிர்த்துவிட்டு ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார். டெக்ஸ்ட் ஃபார் யூ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் பிரியங்கா. அதன் படப் பிடிப்பு லண்டனில் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா கொரோனா லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ள லண்டனில் சலூனுக்கு தனது சிகை அலங்கார நிபுணருடன் சென்று ஹேர் கலரிங் செய்ததாகவும் அவரை அமெரிக்க போலீசார் மடக்கி எச்சரிக்கை செய்ததாகவும் சலூனுக்கு அபராதம் விதித்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் பிரியங்கா சோப்ரா விதி மீறல் எதுவும் செய்யவில்லை. போலீஸ் அனுமதியுடன் தான் நடந்துகொண்டார் என்று அவரது பத்திரிகை தொடர்பாளர் தெரிவித்தார். லண்டனில் நடந்து வந்த பிரியங்கா பட ஷூட்டிங் நிறைவடைந்தது. இப்படம் 2016ல் வெளியான ஜெர்மன் படம் ஒன்றின் தழுவலாக உருவாகிறது. பிரியங்கா சோப்ரா அடுத்த ஒரு ஹாலி வுட் படத்தில் நடிக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.