இந்திய கிரிக்கெட் வீரருக்கு பெண் தேவதை பிறந்ததுள்ளது.. மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட செய்தி..
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் 2017 ஆம் ஆண்டு இறுதியில் பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன பிறகு அனுஷ்கா சர்மா திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
கொரோனா ஊரடங்கில் விராட் கோலி அவரது சோசியல் மீடியா பக்கத்தில் அனுஷ்கா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை சந்தோஷமாக அறிவித்தார். அதுமட்டும் இல்லாமல் எங்கள் குழந்தையை ஜனவரி மாதம் வரவேற்கிறோம் என்பதையும் பதிவு செய்திருந்தார். அனுஷ்கா அவரது கர்ப்பக்காலத்தில் சில துணிச்சலான விஷயங்களை செய்து பல பெண்களின் மனதில் தைரியத்தை ஊக்குவித்தார். தனது கணவரின் உதவியால் தலைகீழாக நின்று யோகாசனம் செய்து இன்ஸ்டாவில் புகைப்படம் எடுத்து பகிர்ந்திருந்தார்.
இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் நலமாக உள்ளனர். உங்களின் அளவில்லாத அன்புக்கும் பிராத்தனைக்கு மிக்க நன்றி. நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தில் அடி எடுத்து வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். அனுஷ்காவுக்கு பலர் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.