மின்சார ரயிலில் போதையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்.. இருவர் புழலில் அடைப்பு..
தாம்பரம் மின்சார ரயிலில் குடி போதையில் உறங்கி கொண்டிருந்த பெண்ணை இருவர் கொடூரமாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனுரை சார்ந்தவர் 40 வயது பெண். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டுக்கு செல்ல பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு மின்சார ரயிலில் எறியுள்ளார். இவர் பயங்கர குடி போதையில் இருந்ததால் ரயிலில் ஏறியவுடன் உறங்கிவிட்டார்.
இந்த பெண்மணி முழு போதையில் இருந்ததால் அவர் இறங்க வேண்டிய இடத்தை தவறிவிட்டு, ரயில் மீண்டும் சென்னை கடற்கரைக்கு சென்று கடைசியில் தாம்பரம் பழுது பார்க்கும் இடத்திற்கு வரும் வரை தூங்கியுள்ளார். ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ரயிலை பழுது பார்க்க வந்த அப்துல் மற்றும் சுரேஷ் ரயிலின் உள்ளே பெண் உறங்கி கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.
அப்பொழுது இருவரும் அப்பெண்ணின் வாயை பொத்தி தகாத முறையில் நடந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் இதை யாரிடமும் சொல்ல கூடாது என்று பயமுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த பெண் இன்று காலை தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த அந்நியாயத்தை தட்டி கேட்க்கும் விதமாக இருவர் மீதும் புகார் அளித்துள்ளார். போலீஸ் அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.