டெஸ்ட் போட்டியில் மட்டமாக நடத்த ஸ்மித்... பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!
சிட்னியில் நடத்த டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் செய்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியை சமம் செய்தது. போட்டியில் இந்திய அணியின் விஹாரி, அஸ்வின் கூட்டணி அதிரடி ஆட்டத்தால் டெஸ்ட் போட்டி சம நிலையை நோக்கி சென்றது. இருப்பினும் இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தால் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பண்ட் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும் என்ற நிலையே இருந்தது.
இதற்கிடையே, கிரிக்கெட் விளையாடும் போது வீரர்கள் தங்களுக்கு ஏற்ப கார்ட் என்ற அடையாளத்தை ஸ்டெம்புகள் முன்பு கால்களால் குறித்துகொள்வார்கள். இதன் மூலம் அவர்களை பந்துகளை கணிப்பார்கள். அதேபோல் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த ரிஷப் பண்டும் கால்களால் அடையாளத்தை குறித்து வைத்துக்கொண்டு அதிரடியாக ஆடினார். ஆனால், கிடைத்த கேப்பில் உள்ளே நின்ற ஆஸிதிரேலிய வீரர் ஷ்டிவ் ஸ்மித், தன் காலால் ரிஷப்பின் அடையாளத்தை மாற்றினார்.
இதனால், பண்ட் குழம்புவார் என ஷ்டிவ் ஸ்மித் நினைத்திருப்பார். ஆனால் நடுவரிடம் தனது கார்ட் குறித்து கேட்டு மீண்டும் தன் அடையாளத்தை குறித்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஸ்டெம்ப் கேமராவில் பதிவான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இணையவாசிகள் டுவிட்டரில் ஸ்மித்தை வாட்டி எடுத்தனர்.