48 எம்பி காமிராவுடன் விவோ ஒய்51ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
5000 mAh பேட்டரியுடன் 18W வேகமான சார்ஜிங் கொண்ட ஒய்51ஏ ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டைட்டானியம் சபையர் மற்றும் கிறிஸ்டல் சிம்பொனி ஆகிய இரண்டு நிறங்களில் இது கிடைக்கிறது. விவோ நிறுவனத்தின் இணையதளத்திலும் அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம் மற்றும் டாடாகிளிக் ஆகிய மின்னணு விற்பனை தளங்கள் மூலமாகவும் இதை வாங்கலாம்.
விவோ ஒய்51ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:தொடுதிரை: 6.58 அங்குலம்; ஹலோ ஃபுல்வியூ; எஃப்எச்டி+; 2408X1080 பிக்ஸல் தரம்இயக்கவேகம்; 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோஎஸ்டி மூலம் 1 டிபி வரை அதிகரிக்கலாம்)முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி (மூன்று காமிராக்கள்)பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 662இயங்குதளம்: ஃபன்டச் ஓஎஸ்; ஆண்ட்ராய்டு 11மின்கலம்: 5000 mAhஎலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (இஐஎஸ்) தொழில்நுட்பம், குறைந்த வெளிச்சத்தில் படமெடுக்க சூப்பர் நைட் காமிரா போன்ற வசதிகள் உள்ள விவோ ஒய்51ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,990/- ஆகும்.