ஒரு தமிழனாக வெட்கி தலைகுனிகிறேன் - ஐபிஎல் போராட்டம் குறித்து பாடகர் ஸ்ரீநிவாஸ்
ஒரு தமிழனாக வெட்கி தலைகுனிகிறேன் என்று ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ள பாடகர் ஸ்ரீநிவாஸ், “என் அணி முதல் இரண்டு போட்டிகளில் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்த நிலையில் ஒரு சிஎஸ்கே ரசிகனாக அதிருப்தி அடைந்துள்ளேன்.
நம் கஷ்டங்களை எல்லாம் மறந்து மகிழ வைப்பது கலையும், விளையாட்டும். கேதர் ஜாதவ், பில்லிங்ஸ், பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றனர். இது தான் விளையாட்டு அல்லது கலையை ஸ்பெஷலாக்குவது.
என் சகோதரர்கள் செய்த காரியத்திற்காக ஒரு தமிழனாக வெட்கி தலை குனிகிறேன். மனிதர்களாக, கலைஞர்களாக நான் விரும்பும் மக்களும் இந்த வன்முறைக்கு காரணம் என்பதால் வெட்கி தலை குனிகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com