டெலிகிராமை உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மேசை கணிணியில் நிறுவுவது எப்படி?
வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும். வாட்ஸ் அப்பிலிருந்து வேறு எந்த உடனடி செய்தி செயலிக்கும் மாறுவதைக் காட்டிலும் டெலிகிராமுக்கு மாறுவது எளிதானதாகும். டெலிகிராம் (Telegram) செயலியை டவுண்லோடு செய்து உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிட்டு அதை உறுதி செய்தால் போதும். உடனடியாக டெலிகிராம் மூலம் நீங்கள் செய்திகளை அனுப்ப முடியும். நீங்கள் ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் திறன்பேசியை (smartphone) பயன்படுத்தினால் கூகுள் பிளே ஸ்டோர்>சியர்ச் டெலிகிராம்>இன்ஸ்டால் (Google Play Store -> Search Telegram -> Install) என்ற வழியில் நிறுவிக்கொள்ளலாம். நீங்கள் ஐஓஎஸ் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் ஆப்பிள் ஆப் ஸ்டோர்>சியர்ச் டெலிகிராம்>கெட் (Apple App Store -> Search Telegram -> Get) என்ற வழியில் நிறுவிக்கொள்ள முடியும்.
டெலிகிராமை பயன்படுத்த தொடங்குவது எப்படி? டெலிகிராம் செயலியை திறந்திடுங்கள். தேவையான அனுமதியை வழங்கிடுங்கள்.பிறகு உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிடுங்கள். டெலிகிராம் மூலம் உங்கள் எண் உறுதிசெய்யப்படும். பின்னர் உங்கள் பெயரின் முதல் பகுதி மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிட்டால் டெலிகிராம் செயலி பயன்படுத்துவதற்கு ஆயத்தமாகிவிடும்.
டெலிகிராம் மூலம் செய்திகளை அனுப்ப ஆரம்பிப்பது எப்படி?கீழே வலப்பக்க மூலையில் தெரியும் 'பேனா' (pen) படத்தை அழுத்தவும். பிறகு உங்கள் தொடர்பு பட்டியலில் யாருக்கு செய்தியை அனுப்ப வேண்டுமோ அவர் எண்ணை அழுத்தவும். அப்போது அரட்டைக்கான புது பட்டி ஒன்று திறக்கும். அதில் செய்தி பெட்டியை (text box) அழுத்தி, செய்தியை உள்ளிட்டு அனுப்பவும். மல்டிமீடியா கோப்புகள், குரல் குறிப்புகள் உள்ளிட்டவற்றையும் டெலிகிராம் மூலம் அனுப்ப முடியும்.
டெலிகிராமில் புதிய குழுவை (group) ஆரம்பிப்பது எப்படி? மேலே கூறப்பட்டுள்ளதுபோன்று 'பேனா' (pen) மீது அழுத்தி, புதிய குழு (New Group) என்பதை தெரிவு செய்யவும். உங்கள் தொடர்பு பட்டியலில், புதிய குழுவில் சேர்க்க விரும்புபவர்களின் எண்களை தெரிவு செய்யவும். பிறகு 'அடுத்தது' (Next) என்பதை அழுத்தவும். புதிய குழுவுக்கான பெயரை உள்ளிட்டு பிறகு 'டிக்' (tick) பொத்தானை அழுத்தவும். டெலிகிராம் மற்ற எந்த செய்தி செயலிகளை காட்டிலும் பயன்படுத்துவதற்கு எளிதானது என்று கூறப்படுகிறது.