நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணியில் வெள்ளம் மணிமுத்தாறு அணை திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும்.

உபரி நீரின் அளவு 18 ஆயிரம் கன அடியாகவும் பாபநாசம் அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி மற்றும் உபரி நீர் ஆயிரம் என மொத்தம் தாமிரபரணி ஆற்றில் 25,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரைக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளைப் பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், 188 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும்., அம்பாசமுத்திரம் ஆலடியூரை சேர்ந்த 50 பேர் முன்னெச்சரிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக வெள்ள பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

More News >>