பத்தே நிமிடத்தில் சுவையான தக்காளி தோசை செய்வது எப்படி??

காலை மற்றும் இரவுக்குரிய டிபன் வகையில் முதல் பட்டியலில் இடம் பிடித்திருப்பது தோசை. அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாகவும் மிக ஈஸியாகவும் சமைக்க கூடிய உணவு என்றால் அதுவும் தோசை தான். கொத்தமல்லி தோசை, வெங்காய தோசை, சிக்கன் கறி தோசை... என விதமான தோசைகள் உள்ளது. தக்காளியில் கூட சுவையான மொறு மொறு தோசை செய்யலாம். தக்காளி தோசை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:- தக்காளி - 3 கோதுமை மாவு - 250 கிராம் வெங்காயம் - 1 இட்லி மாவு - 100 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2 உப்பு -தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு சீரகம் - 1 ஸ்பூன்

செய்முறை:- முதலில் தக்காளி, வெங்காயம் ஆகியவை நறுக்கி கொள்ளவும். மிக்சியில் கோதுமை மாவு, தக்காளி, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லி மாவில் அரைத்த கலவையை தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

நறுக்கிய வெங்காயத்தையும் மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு அதில் மாவை ஊற்றி பொன்னிறமாக வரும் வேளையில் தோசையை திருப்பி எடுத்தால் சுவையான மொறு மொறு தக்காளி கோதுமை தோசை தயார்.

More News >>