கன மழை எதிரொலி: தேசிய பேரிடர் மீட்பு படை நெல்லை விரைவு

கன மழை காரணமாக நெல்லை மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளின் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் சுமார் 40,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சார்ந்த நந்தகுமார் தலைமையில் 50 பேர் அடங்கிய 2 இரண்டு குழுக்கள் நெல்லை மாவட்டம் விரைந்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 85 மில்லி மீட்டர்ரும் , மணிமுத்தாறில் 70 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

More News >>