கல்லூரி விடுதியில் இனி நடராஜன் படம் தான்: நடிகர் சதீஷ் டுவிட்டரில் பெருமிதம்.!!!
சென்னை: தமிழக இளம் கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜனை பல்வேறு தரப்பினர் வாழ்த்தி வரும் நிலையில் நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார். தமிழக இளம் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது ஐபிஎல் ஆட்டம் முதல் டெஸ்ட் போட்டி முதல் ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சாதனை படுத்தி வருகிறார். இது இந்தியராகிய அனைவரும் குறிப்பாக தமிழகர்கள் பெருமிதமாக கருதுகின்றனர்.
நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்களை தங்கள் சொந்த களத்திலேயே நடராஜன் தனது பந்துகளால் பந்தாடினார். இதனை பல்வேறு தரப்பினர் வாழ்த்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிரபல தமிழ் திரை நகைச்சுவை நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், காலம் காலமாக தமிழ் சினிமாவின் கல்லூரி விடுதி காட்சிகளில் அந்த இடத்தை சச்சின், தோனி, கோலி மாதிரியான வீரர்கள் அலங்கரித்ததை பார்த்திருப்போம். இப்போது அந்த இடத்தை நம்ம ஊரை சேர்ந்த நடராஜனை அலங்கரிக்கிறார். உனது வளர்ச்சியை பார்க்கும் போது பெருமையாக உள்ளது நடராஜன் என்று நடரானுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.