பதட்டமும் எரிச்சலும் துரத்துகிறதா..? நீரிழிவாகக்கூட இருக்கலாம்!

திடீர் திடீரென நமக்கு பதட்டம் ஏற்படும். காரணமே இல்லாமல் வியர்த்துக்கொட்டும். இது உங்கள் ரத்தத்தில் உள்ள க்ளுக்கோஸ் அளவு குறைவதற்கான அறிகுறியே!

உள்ளங்கை எப்போதும் வியர்த்து, நாக்கு வறண்டு உடலில் அதிகமாக வியர்த்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது என்பது அர்த்தம். இந்த அசாதாரணமான நிலையும் சர்க்கரை வியாதியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்பது ஞாபகமிருக்கட்டும்.

சம்பந்தமே இல்லாமல் நமக்கு அடிக்கடி எரிச்சல் வரும். எதற்கு இந்த இடத்தில் நாம் கோபமடைந்தோம் என நமக்கே தெரியாமல் எரிச்சலும் கோபமும் நம் கண்ணை மறைத்திருக்கும். இந்த மாதிரியான சூழலில் ரத்ததில் க்ளுக்கோஸ் அளவு அளவுக்கு அதிகமாக உயர்ந்தால் மட்டுமே சர்வ சாதாரணமாக எரிச்சல் வரும். 

உணர்வுகளில் திடீர் திடீரென ஏற்படும் மாற்றம் சர்க்கரை வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். அதிக கோபம், எரிச்சல், குழப்பமான மனநிலை என நம் சூழலே மாறிவிடும் முன்னர் மருத்துவரை அணுகுவது நல்லது.

முப்பது வயதைக் கடந்த பலர் வேலை பளுவினால் இன்று தங்கள் உடல்நலம் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகின்றனர். ஆனால், வேலை டென்ஷன் என பல அறிகுறிகளையும் நாம் வெறும் காரணம் சொல்லியே தட்டிக்கழித்து வருகிறோம்.

சமீபத்தில் அமெரிக்காவின் உயரிய மருத்துவ அறிவியல் கழகத்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் கெட்ட கனவு கூட நீரிழிவின் நீட்சியாகக் கூறப்படுகிறது. தூக்கத்தில் திடீர் திடீரென அலறிஅடித்துக்கொண்டு எழுவோம். இது எப்போவாவது என்றால் சரி. ஆனால், அடிக்கடி கெட்ட கனவு என்ற பெயரில் நடு ராத்திரியில் தூக்கம் களைந்து முழித்துக்கொள்கிறீர்கள் என்றால் அது சர்க்கரை வியாதியில் ஒரு அறிகுறி என்கின்றனர் பிரபல சர்க்கரை வியாதி நிபுணர்கள்.

இந்த மாதிரியான சூழலில் ரத்தத்தில் உள்ள க்ளூகோஸ் அளவை உடனடியாகப் பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகக் கூறப்படுகிறது.

 
More News >>